Politics
வாலிபரை தாக்கிய 3 பேருக்கு காப்பு
சேலம்:சேலம், அமானி கொண்டலாம்பட்டி, அரசமரத்துகாட்டூரை சேர்ந்தவர் விஜய், 26. சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில், 'புட் டெலிவரி' தொழில் செய்தார்.
சமீபத்தில் சொந்த ஊர் வந்த நிலையில், சக ஊழியர், டெலிவரி பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைக்காமல், அவரும் ஊருக்கு வந்துள்ளார். நிறுவன உரிமையாளர், பணத்தை பெற்று தரும்படி, மொபைலில் விஜய்க்கு தகவல் தெரிவிக்க, அதற்கு அவர் மறுக்கவே, வாக்குவாதம் நடந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு விஜயை, அங்குள்ள காட்டூர் மாரியம்மன் கோவில் பகுதிக்கு அழைத்து, ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், அரசமரத்துகாட்டூரை சேர்ந்த தீபக், 19, மதன், 21, சாரதி, 23, ஆகியோரை கைது செய்து, மேலும் சிலரை
தேடுகின்றனர்.