Politics
சென்னை ஏர்போர்ட் ரொம்ப மோசம் கார்த்தி எம்.பி., வேதனை
மானாமதுரை: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மிகவும் மோசமானது சென்னை விமான நிலையம் என எம்.பி., கார்த்தி கூறினார்.
மானாமதுரையில் எம்.பி., கார்த்தி கூறியதாவது:
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதை அப்பகுதி மக்களின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது. இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுவதால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆளும்கட்சி தான் பேச்சுவார்த்தை நடத்தி கருத்து வேறுபாடோ, மனவருத்தமோ இருந்தால் சரி செய்ய வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளுமே அவர்களுடைய தலைவர்களை வானளாவிய அளவிற்கு புகழ்வது வழக்கம். விஜய் திரையுலகத்திலிருந்து வந்துள்ளார். அவர்களிடம் ஹீரோ கலாசாரம் இருப்பது இயல்பு.
இந்தியாவிலேயே மிகவும் மோசமான விமான நிலையமாக சென்னை உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தமிழகம், இந்தியாவின் அடையாளங்களை வெளிப்படுத்தியது நல்லது. தமிழக உணவுகளுடன் செட்டிநாடு சிக்கனையும் பரிமாறியிருக்கலாம் என்றார்.