Arts, culture, entertainment and media
மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு...
இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு தேதி வெளியிடப்பட்டுள்ளது.
தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
லைக்கா புரோடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகள் இடையே உருவாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் பெயர் வரும் செப். 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு இன்று (செப். 4) சிறப்பு விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவான “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The date for the announcement of the title of the film directed by Mani Ratnam and starring Vijay Sethupathi and Sai Pallavi has been revealed.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.