Politics
சாலை தடுப்பில் பைக் மோதி ஆழ்வார்பேட்டை வாலிபர் பலி
மயிலாப்பூர்: சாலை தடுப்பில் பைக் மோதியதில், பிரவீன்குமார், 20 என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆழ்வார்பேட்டை, 4வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 20. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு துரைப்பாக்கத்தில் உள்ள அவரது நண்பரை சந்திக்க, கே.டி.எம்., டியூக் பைக்கில் சென்றார். பின் வீட்டிற்கு ராஜிவ் காந்தி சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்.
தரமணி மகளிர் பாலிடெக்னிக் அருகே வந்தபோது, பிரவீன்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து விசாரித்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.