Arts, culture, entertainment and media
பிக் பாஸ் 10 வெற்றியாளர் முனியம்மாதான்! வெளியேறிய சவின்யா நம்பிக்கை!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சன்வியா பேசியது குறித்து....
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முனியம்மா இடம்பெறுவார் என இப்போட்டியில் இருந்து வெளியேறிய சவின்யா வேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே சிலர் குழுவாகச் சேர்ந்து விளையாடுவதாகவும், பிக் பாஸ் விதிகளைப் புரிந்துகொள்ளாமல் தலைவியாக இருந்த சாதிகா தன்னை நாமினேஷன் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களுக்கு மக்கள் வாக்களித்து, அதில் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்த சீசனில் நாமினேஷன் பட்டியலில் இருப்போருக்கு, சக போட்டியாளர்களால் வாக்களிக்கப்பட்டு அதில் அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார்.
அந்த வகையில் முதல் வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் இருந்த முனியம்மா, சன்வியா, தன்யா ஆகியோரில் அதிக வாக்குகள் பெற்று சன்வியா வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சவின்யா பேசியதாவது:
''பிக் பாஸ் கூறியதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தலைவராக இருந்த சாதிகா என்னை நாமினேட் செய்துவிட்டார். முதல் இரு நாள்கள் என்னுடைய பங்களிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், நான் வெளியேறும் நபர்களின் பட்டியலில் நாமினேஷன் செய்யப்பட்டதும் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அதனால் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதுவே என்னுடைய பங்களிப்பு போதுமானதாக இல்லை என என்னை நாமினேட் செய்ய போதுமானதாக இருந்துவிட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன் பச்சோந்தி போல சுயநலத்துக்காக மாறிமாறி நடந்துகொள்கிறார். காமன்மேன் நிகழ்ச்சிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அதிக வித்தியாசமாக நடந்துகொள்கிறார் எனக் குறிப்பிட்டார்.
மேலும், நடிகை முத்தழகி பாம்பு போன்றவர் என்றும் அன்சர் நரியைப்போன்றவர் எனவும் கூறியிருந்தார்.
இதுமட்டுமின்றி பிக் பாஸ் 10 சீசனில் அதிக வெற்றி வாய்ப்பு உள்ள போட்டியாளர் முனியம்மா என்றும், இவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் வினோத்பாபு
3வது இடத்தில் லட்சுமி பிரியா, 4வது இடத்தில் சாந்தினி, 5வது இடத்தில் அடாவடி அன்சர் ஆகியோர் இருப்பார்கள் எனவும் சன்வியா குறிப்பிட்டார்.
Muniyamma is the Bigg Boss 10 winner! Evicted contestant Savinya is confident
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.