விவசாயியை தாக்கிய வாலிபருக்கு காப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அன்னி-யாளம் அருகே கல்கானி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 53, விவசாயி. கடந்த, 12ம் தேதி இரவு, 8:30 மணிக்கு, ஓசூர் - தளி சாலையில் உள்ள அந்திவாடி அருகே, விநாயகர் சிலை வாங்க குடோனுக்கு சென்றார். அங்கிருந்த, ஓசூர் அருகே கர்-னுாரில் வசிக்கும், கர்நாடகா மாநிலம், மைசூரு பகுதியை சேர்ந்த சோகன், 21, மற்றும் அவரது தந்தை பண்ணாராம், 75, ஆகியோருக்கும்,
வெங்கடேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்-பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோகன், பண்ணாராம் ஆகியோர், வெங்கடேஷை நாற்காலியால் தாக்கி மிரட்டல் விடுத்-தனர். இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார் படி, மத்திகிரி போலீசார், சோகனை கைது செய்தனர். பண்ணாராமை தேடி வரு-கின்றனர்.