Politics
”ரகசியமாக 2 வது திருமணம் செய்த முதல்வர்”; ஆதாரங்களுடன் வந்த இருவர்

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக்கப் பிரபல ஊடகவியலாளர் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஆன்டோ அகஸ்டின், ”கோடிக்கணக்கான மதிப்புள்ள செய்தித் தகவல் தங்களிடம் இருப்பதாகக் கூறி, இருவர் சில ஆவணங்களுடன் என்னை அணுகினர். அப்போது, முதல்வர் வி.டி. சதீசன் 2012-ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதற்கான ஆவணங்கள் (ஆதாரம்) தன்னிடம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்பு, அவர்கள் என்னிடம் அளித்த ஆவணங்களைச் சரிபார்க்க, எங்கள் ஊடகத்தின் திருவனந்தபுரம் பிரிவுத் தலைவர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரை கர்நாடகாவின் பைந்தூருக்கு அனுப்பினோம். ஆனால், அத்தகைய நிகழ்வு சம்பந்தமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் செய்தியாக வெளியிடவில்லை. அங்குச் சென்ற செய்தியாளரும் பதிவேட்டைச் சரிபார்த்தபோது, அதை உறுதிப்படுத்தும் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. பின்பு, அது ஒரு போலியான ஆவணமாக இருக்கலாம் என்று அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தவறான மற்றும் புனையப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் ராஜு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பிரபல ஊடகத்தின் நிர்வாக இயக்குநர் ஆன்டோ அகஸ்டின் மற்றும் இருவர் மீது திருவனந்தபுரம் இணையக் குற்றக் காவல் நிலையம் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)