இறந்த முதியவரின் கண்கள் தானம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இறந்த முதியவரின் கண்களை, லயன்ஸ் சங்கத்தினர் தானமாக பெற்றனர்.
கள்ளக்குறிச்சி டி.எம்.எஸ்., நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன், 80; வயது மூப்பு காரணமாக இறந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் கள்ளக்குறிச்சி லயன்ஸ் சங்கத்தினர் இறந்த கோவிந்தன் கண்களை தானமாக பெற்றனர்.
லயன்ஸ் சங்கத் தலைவர் டாக்டர் நேரு தலைமையில் தானமாக பெற்று, கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தில்குமார், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், கண்ணன், வினோத், ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.