ஆதரவற்ற முதியவர் மீட்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மதுரை ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுக்கு உடைகளுடன் ஆதரவற்ற நிலையில் மழையில் நனைந்தபடி ரோடோரத்தில் இருந்தார்.
இது பற்றி அறிந்த எம்.சுப்பலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார் ஆண்டிபட்டி போலீசார் உதவியுடன் முதியவரை மீட்டார். அந்த முதியவரை சுத்தம் செய்து, உடைகள் மாற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவ சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். முதியவர் குறித்து விபரங்களை சேகரித்து உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.