ஜோக்(ஸ்)பாட்..! - ஸ்மைல் ப்ளீஸ்

இந்த ஓவியத்தை ஆனந்த விகடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஜோக்ஸ் இங்கே...
``என்னப்பா இது... எங்களுக்கு மட்டும் ஒரே ஒரு இலை போட்டிருக்கே..?’’
``மொய் கவர் ஒருத்தர்தானே தந்தீங்க... அதான்.’’
“எத்தனை தடவை சொன்னேன்... நான் ரீல்ஸ் எடுத்து முடிக்கிறவரைக்கும் சாப்பாட்டுல கையை வெக்காதீங்கனு...’’
``என்னங்க உங்களை மட்டும் விசேஷமா கவனிக்கிறாரு?’’
``மொய்க்கு வெச்சிருந்த பணத்துல நூறு ரூபாய் எடுத்து அவருக்கு டிப்ஸ் குடுத்துட்டேன். அதான் இந்த ஸ்பெஷல் கவனிப்பு!’’
``பிரியாணி வர லேட்டாகும்னா, சட்டசபை நிகழ்ச்சிகளையாவது டி.வி-யில போட்டு விடுங்க சார். ரொம்ப போர் அடிக்குது.’’
``ஆஹா... இந்த மாதிரி சாஃப்ட்டான தோசையை நான் சாப்பிட்டதேயில்லை.’’
``ஏங்க, அது கை துடைக்க வெச்ச டிஷ்யூ பேப்பருங்க!’’
