திண்டுக்கல் தல-ப்பாக்கட்டி கிளை பெங்களூரில் சிவராஜ்குமார் திறப்பு

சென்னை: திண்டுக்கல் தலப்பாக்கட்டியின் புதிய உணவகத்தை, கர்நாடகா மாநிலம் பெங்களூரில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் திறந்து வைத்தார்.
கடந்த 1957ல் தொடங்கப்பட்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம், தனித்துவமான சுவையால் மக்களின் வரவேற்பை பெற்றது.
இதன் புதிய கிளை, கர்நாடகா மாநிலம், பெங்களூரு கோரமங்களா பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தை, கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், உணவகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.
இது குறித்து, தலப்பாக்கட்டி பிரியாணி உணவக நிர்வாகிகள் கூறியதாவது:
மறைந்த டாக்டர் ராஜ்குமாருக்கும், திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவகத்திற்கும், ஒரு பொன்னான நினைவு உள்ளது. கொடைக்கானலில் நடந்த ஒரு படப்பிடிப்பை முடித்து, திண்டுக்கலில் உள்ள எங்களது தலைமை உணவகத்திற்கு, ராஜ்குமார் வருகை தந்தார். அந்நிகழ்வை, இன்றும் நாங்கள் நினைவுகூர்கிறோம்.
அவரது பாரம்பரியத்தை தொடர்ந்து, அவரது மகனும், கன்னட திரை உலகின் மூத்த நடிகருமான சிவராஜ்குமார், எங்கள் உணவகத்தை திறந்து வைத்தது, உணர்வுபூர்வமான நிகழ்வாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.