ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு முதல் ரூ.3,000 ஓய்வூதியம் வரை... 3 நாட்கள் மெகா சேவை முகாம்

இந்த முகாமில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பயனுள்ள பல சேவைகள் நேரடியாக வழங்கப்பட உள்ளன.
தஞ்சாவூரில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சேவை முகாம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
