Politics
கண் சிகிச்சை முகாம்
சோழவந்தான்: சோழவந்தானில் வ.உ.சி., பிறந்தநாளை முன்னிட்டு சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை, வடக்குரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். கலாம் அறக்கட்டளை பொதுச்செயலாளர் நாகு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அண்ணாதுரை, நாகராஜ் வரவேற்றனர். சங்கரா கண் மருத்துவமனை குழுவினர் சிகிச்சையளித்தனர்.
இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் அமைப்பாளர் ஜெயகர் ஏற்பாடுகளை செய்தார்.