Lifestyle and human interest
சேதமடைந்த குடிநீர் தொட்டி மாற்ற மக்கள் கோரிக்கை
உத்திரமேரூர், செப். 9– காந்தி கிராமம் பகுதியில், சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என, அப்பகுதி
காந்தி கிராமம் பகுதியில், சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், மேனலுார் ஊராட்சி, காந்தி கிராமம் பகுதியில், 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பகுதி மக்கள் தேவைக்காக அப்பகுதியில், சிறு மின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இதன் மூலம் காந்தி கிராமம் மக்கள் வீட்டு உபயோக தேவைகளுக்கு தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘‘குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளதால், மின் மோட்டரை இயக்கி நேரடியாக தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத நேரங்களில் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்,’’ என்றார்.
எனவே, சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.