Economy, business and finance
சவுக்கு சங்கர், மாலதி குறித்து அவதூறு; வார பத்திரிகை செய்தியாளர் கைது

சென்னை: யூடியூபில் சவுக்கு சங்கர் மற்றும் மாலதி குறித்து அவதூறாக பதிவிட்ட நக்கீரனில் வேலை பார்க்கும் செய்தியாளர் பிரகாஷ், 58, என்பவர் கைது செய்யப்பட்டார்.
யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரகாஷ், சவுக்கு சங்கர் மற்றும் மாலதி பற்றி அவதூறாக பேசினார். இந்த வீடியோ வைரலான நிலையில், செய்தியாளர் பிரகாஷ் மீது மாலதி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார், செய்தியாளர் பிரகாஷை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.