Politics
அடிக்கடி மின்தடை
புதுச்சேரி, காந்தி நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பானுரேகா, காந்தி நகர்.
புதுச்சேரி காந்தி நகர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
மதி, காந்தி நகர்.
புதுச்சேரி, ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் உள்ள சிலாப் மேடாக உள்ளதால் கழிவுநீர் மற்றும் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
முத்து, ரெயின்போ நகர்.
உழவர்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பாரதி, உழவர்கரை.
தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் உள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், தேங்காய்த்திட்டு.