Politics
இ.கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகிக்கு சிகிச்சை
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலர் ராஜா, சென்னையில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது நேற்று திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் அவர், முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர், உடல் நலத்துடன் உள்ளார். த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்று, ராஜாவை சந்தித்து, நலம் விசாரித்தனர்.