திருமணிமுத்தாற்றில் அனுமதியின்றி கால்வாய் தோண்டுவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கலெக்டர் மதுபாலனிடம்
மாவட்ட திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், கலெக்டர்
மதுபாலனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகி சேலம், நாமக்கல் மாவட்டங்களில்
பல்வேறு ஏரி குளங்களை நிரப்பி, நீர் பாசன வசதியை அளித்து, நாமக்கல்
மாவட்டம் பரமத்தி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில்
ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி அருகே உள்ள அணையிலிருந்து,
மல்லசமுத்திரம் மற்றும் வேறு பகுதிகளுக்கு திருமணிமுத்தாற்று
தண்ணீரை, சில அதிகாரிகளின் துணையுடன் திசை திருப்பி எடுத்து செல்வதற்காக, ராட்சத கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குறுக்கே கால்வாய் அமைத்து அங்கு தண்ணீரை திருப்பி விட்டால், நாமக்கல்
மாவட்டத்தில் பாயும் திருமணிமுத்தாறு முழுமையாக வறண்டு போகும்
அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து,
மதியம்பட்டி மல்லசமுத்திரம் பகுதியில் நடைபெறும் ராட்சத கால்வாய்
நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.