பணி மேம்பாடு ஆய்வு கூட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களோடு பணி மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், அனைத்து மண்டலங்களில் உள்ள பணிகளின் மேம்பாடு குறித்து மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் ஆய்வு செய்தார்.
டீசல் சிக்கனம், வருவாய் பெருக்கம், உதிரி பாகங்கள் கொள்முதல், தேய்மானம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களோடு, மேலாண் இயக்குநர் ஆய்வு செய்து, பணிகளின் மேம்பாடு குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொது மேலாளர்கள் ரவீந்திரன் (தொழில்நுட்பம்), பத்மகுமார் (கடலுார்), ரவி (காஞ்சிபுரம்), சொர்ணலதா (வேலுார்), கோபாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), முதுநிலை மண்டல துணை மேலாளர் துரைசாமி உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.