ஊராட்சி கணினி இயக்குபவர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனைத்து ஊராட்சி கணினி இயக்குபவர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட பொதுச்செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். தலைவர் அறிவுச்செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் பிரசாந்த், துணை தலைவர் யோகேஷ்வரன், கடலுார் மாவட்ட செயலாளர் அனிஷ், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் முத்து மணிகண்டன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், ஊதிய உயர்வு வழங்க வண்டும். நான்கரை ஆண்டுகளை கடந்தும் பணி நிரந்தரம் செய்யாதது மற்றும் நேரடி வங்கி கணக்கிற்கு ஊதியம் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துணை ஆணையர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாத சந்தா வசூலித்தல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட அளவில் கூட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.