Arts, culture, entertainment and media
Magudam | விஷாலின் ‘மகுடம்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ்..? எந்த தளத்தில் பார்க்கலாம்?

விஷால் நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மகுடம்’ படத்தை ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. படப்பிடிப்பும் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு நடைபெற்று வந்த சில நாட்களில் விஷால் - ரவி அரசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. படத்திலிருந்து ரவி அரசு விலகினார். இதன் காரணமாக படத்தின் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் களமிறங்கினார் விஷால்.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபில்ம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தயாரித்தது. துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பலவீனமான திரைக்கதை, தேவையற்ற சண்டை காட்சிகள், சுவாரஸ்யமில்லாத காட்சிகள் என ரசிகர்கள் விமர்சித்தனர்.
இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் நாளை (செப்.11) அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலை பொறுத்தவரை, அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மத கஜ ராஜா’ ஹிட் கொடுத்தது. அதற்கு முன்பு ‘மார்க் ஆண்டனி’ படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது.
அடுத்து சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருடன் தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதேபோல, நீண்ட நாட்களாக விஷால் இயக்கி வரும் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
