Politics
தப்பு செய்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை: அமைச்சர் பேச்சு
ப.பாளையம்:யாராக இருந்தாலும் பயப்படமாட்டோம்; தப்பு செய்தால் நடவடிக்கை எடுப்போம், என, பள்ளிப்பாளையத்தில்
இருந்தாலும் பயப்படமாட்டோம்; தப்பு செய்தால் நடவடிக்கை
எடுப்போம்,'' என, பள்ளிப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்,
பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பேசினார்.
தொகுதி, த.வெ.க., சார்பில், 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்,
பள்ளிப்பாளையம் நேரு திடலில், நேற்று இரவு நடந்தது. பால்வளத்துறை
அமைச்சர் விஜயலட்சுமி கலந்துகொண்டு பேசியதாவது:
வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், நிறைய தொழில் நிறுவனங்களுடன்
ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட
சாயப்பட்டறைகளை மூடிவிட்டோம். இன்னும் புகார் வருகிறது,
சரியில்லாத சாயப்பட்டறை தொடர்ந்து மூடப்படும். யாராக இருந்தாலும்
பயப்பட மாட்டோம். தப்பு யார் செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்.
நல்லது செய்வது மட்டும் தான் எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.