Arts, culture, entertainment and media
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அப்டேட்!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில்... - படம்: யூடியூப் / வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷ்னல்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வெளியான படம் மூக்குத்தி அம்மன்.
முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் டீசரான ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ வரும் செப். 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், படம் தீபாவளி வெளியீடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Presenting the #RiseOfMahasakthi from Sep 14th, 10 AM
A @sundarcoffl Mega Divine Entertainer#MookuthiAmman2 #Mahasakthi@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @kushmithaganesh #VigneshShivan @hiphoptamizha @gopiamar @FennyOliver⦠pic.twitter.com/4SSaikxL3A
An announcement regarding the Teaser from the movie Mookuthi Amman 2 has been released.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.