திண்டிவனத்தில் அதிகபட்ச மழைப்பதிவு
விழுப்புரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 85 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இரவில் பரவலாக மழை பெய்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் :
விழுப்புரத்தில் 2 மி.மீ., கோலியனுார் 25 மி.மீ., வளவனுார் 21 மி.மீ., கெடார் 36 மி.மீ., முண்டியம்பாக்கம் 27 மி.மீ., நேமூர் 56 மி.மீ., கஞ்சனுார் 40 மி.மீ., சூரப்பட்டு 30 மி.மீ., வானுார் 6 மி.மீ., திண்டிவனம் 85 மி.மீ., செஞ்சி 9 மி.மீ., செம்மேடு 5 மி.மீ., வல்லம் 62.80 மி.மீ., அனந்தபுரம் 18 மி.மீ., அவலுார்பேட்டை 2 மி.மீ., வளத்தி 3 மி.மீ., உட்பட மொத்தம் 427.80 மி.மீ., மழையளவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதன் சராசரி 20.37 மி.மீ., ஆகும்.