மதத்தை மாற்றி பாஸ்போர்ட் சவுதி சென்று வந்தவர் கைது

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன், 52, என்பவர், 2021ல், ஐக்கிய அரபு எமிரேட்சின் சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றார். இவர், தன் பெயரை ஆன்டனி அருண் என மாற்றி, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என போலி ஆவணம் தயாரித்து, போலி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்றார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த கணேஷமூர்த்தி என்பவருக்கு ஆனந்தன் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனந்தன் வெளிநாடு சென்றதை அறிந்த கணேஷமூர்த்தி விசாரித்த போது, அவர் போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. கணேஷமூர்த்தி, கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆனந்தனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.