சி. என்.பாளையத்தில் மனைவி நல வேட்பு விழா
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில்,பண்ருட்டி பங்களா தெரு தவமையத்தின் சார்பில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு மலையாண்டவர் கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம்,முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மல்லிகா ஆகியோர் தலைமை தாங்கினார்.மகாலிங்கம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,அருளரசு,கடலுார் மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திராதேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பரிமளரங்கன்,புவனேஸ்வரி தம்பதிகள் காந்த பரிமாற்ற தவம் குறித்து விளக்கினர்.பாலமுருகன்,செல்வி,புருேஷாத்தமன்,சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பண்ருட்டியில் மன வளக்கலை மன்றம் சார்பில் மனவளக்கலை,குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் வகையிலும், கணவன்–மனைவி இடையே அன்பையும், நல்லிணக்கத்தையும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் வகையிலும்,மன அமைதி,குடும்ப ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா,விழுப்புரம் ராஜேந்திரன்,பாலு உள்ளிட்ட ஏராளமானோர் தம்பதியினருடன் ஆர்வமுடன் பயிற்சிகளை மேற்கொண்டனர்.