புகார் பெட்டி
டவுன் பஸ் இயக்கப்படுமா? திட்டக்குடியில் இருந்து நெய்வாசலுக்கு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை
டவுன் பஸ் இயக்கப்படுமா?
திட்டக்குடியில் இருந்து நெய்வாசலுக்கு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழுமலை, நெய்வாசல்.
காத்திருப்போர் கூடம் திறக்கப்படுமா?
திட்டக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் பூட்டிக் கிடக்கும் காத்திருப்போர் கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, அகரம்.
இருக்கைகள் சீரமைக்கப்படுமா?
திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடேசன், திட்டக்குடி.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக பயணியர் நிழற்குடை முன்பு வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமரன், விருத்தாசலம்.