Crime, law and justice
நிலுவை வழக்கில் தீர்வு காண 2 மாதம் சமரச தீர்வு முகாம்
கோவை: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவுபடி, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளவழக்குகளை சமரசம் வாயிலாக தீர்த்து வைப்பதை நோக்கமாக கொண்டு தேசத்திற்கான சமரசம் 3.0' என்ற தலைப்பில் சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது.
அக்., 1 முதல் டிச., 31, வரை தேசிய அளவில், மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெறும். அதன்படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் உள்ள சமரச தீர்வு முகாம் நடைபெறும்.
சமரசத்தால் வழக்குகளை விரைவாக முடித்து கொள்வதோடு, நேரம், செலவு மிச்சமாகும். ரகசியம் பாதுகாக்கப்படும் இருதரப்பினர் இடையே, பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய தீர்வை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் பயன்படுத்த, மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீ தேவி அறிவுறுத்தியுள்ளார்.