Economy, business and finance
கோயம்பேடு சந்தையில் எலுமிச்சை கிலோ ரூ.300
கோயம்பேடு, செப். 5– கோயம்பேடு சந்தையில் எலுமிச்சை வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோ, 300 ரூபாய் வரை
கோயம்பேடு சந்தையில் எலுமிச்சை வரத்து குறைந்ததால், அதன் விலை கிலோ, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் எலுமிச்சை கொண்டு வரப்படுகிறது.
தற்போது விளைச்சல் குறைந்ததால், மகாராஷ்டிராவில் இருந்து ரயில், லாரிகள் மூலம் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு நான்கு நாட்கள் ஆவதால், வழியிலேயே கிலோ கணக்கில் பழங்கள் அழுகுகின்றன.
தினமும் 150 முதல் 180 டன் தேவைப்படும் நிலையில், 20 முதல் 30 டன் மட்டுமே வரத்து உள்ளது. இதனால் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட, எலுமிச்சை தற்போது, 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில், ஒரு பழம் 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.