Arts, culture, entertainment and media
"ஆமா கரெக்ட்... லண்டனில் தானே..." - வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி!

நடிகை கீர்த்தி சுரேஷும் லண்டன் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் உண்மையில் லண்டன் செல்லவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டோரத்தி' படத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய், இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், நள்ளிரவில் துபாய் சென்றடைந்தார். அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் லண்டன் சென்றடைந்தார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை முதலமைச்சர் விஜய் இன்று பார்வையிடுகிறார். தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரை சிறந்த முறையில் அமைக்கும் விதமாக, ரேசிங் சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
மேலும், நடிகரும், கார் ரேஸ் வீரருமான அஜித்குமாரை சந்திக்கும் முதலமைச்சர் விஜய், பங்கேற்கும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பையின் சில்வர் ஸ்டோன் சுற்று கார் பந்தயத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதற்கிடையே, நடிகை கீர்த்தி சுரேஷும் லண்டன் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் உண்மையில் லண்டன் செல்லவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டோரத்தி' படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இந்த படம் கனடாவில் டொராண்டோ திரை விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக கீர்த்தி சுரேஷ் கனடா செல்ல விமானம் வந்ததை தான் சிலர் அவர் லண்டன் செல்வதாக வதந்தியை கிளப்பினார்.
கீர்த்தி சுரேஷின் விமான நிலைய வீடியோவை வைத்து, அவர் லண்டன் செல்வதாக பரவிய வதந்திக்கு, 'ஆமா கரெக்ட்.. லண்டனில் தானே டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் நடக்குது!' என நடிகை கீர்த்தி சுரேஷ் நக்கலாக கமெண்ட் செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷின் பதிவு கவனம் பெற்று வருகிறது.
