Lifestyle and human interest
நாமக்கல் டி.எஸ்.பி., அலுவலகம் இடமாற்றம் முன்னறிவிப்பு இல்லாததால் மக்கள் தடுமாற்றம்
நாமக்கல்:நாமக்கல் டி.எஸ்.பி., அலுவலகம் முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டதால், புகாரளிக்க வரும்

டி.எஸ்.பி., அலுவலகம் முன்னறிவிப்பின்றி இடமாற்றம்
செய்யப்பட்டதால், புகாரளிக்க வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார்,
திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் என, ஐந்து சப்-டிவிஷன்கள் உள்ளன.
அதில், நாமக்கல் சப்-டிவிஷனில், நாமக்கல், நல்லிபாளையம், மோகனுார்,
எருமப்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம்,
வாழவந்திநாடு, செங்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் அமைந்துள்ளன.
நாமக்கல்-பரமத்தி சாலையில், டி.எஸ்.பி., அலுவலகம் அமைந்திருந்தது.
அங்கு, சப்-டிவிஷனில் உள்ள போலீஸ் சரகத்திற்குட்பட்ட
பொதுமக்கள், பல்வேறு புகார்களை தெரிவித்து தீர்வு கண்டனர். அதனால்,
டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு, ஏராளமான பொதுமக்கள் வருவது வாடிக்கை.இந்நிலையில்,
டி.எஸ்.பி., அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நாமக்கல் -
பரமத்தி சாலை, காவேட்டிப்பட்டி கொங்கு நகருக்கு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதனால், டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார்களை
தெரிவிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்ததுடன், கடும்
அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, கொல்லிமலை,
எருமப்பட்டி, புதுச்சத்திரம் பகுதி மக்கள் பழைய அலுவலகத்திற்கு
வந்து இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து, புதிய அலுவலகத்திற்கு
நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து,
டி.எஸ்.பி., ராஜேஸ்வரனிடம் கேட்டபோது, ''அலுவலக கட்டடம்
பழுதடைந்துள்ளது. அவற்றை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், தற்காலிகமாக, ஒரு
வாரத்திற்கு முன்பே, காவேட்டிப்பட்டி கொங்கு நகருக்கு டி.எஸ்.பி.,
அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதி எவ்வளவு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை,'' என்றார்.