கார் விபத்தில் ஒருவர் பலி
தேவகோட்டை, செப். 18– ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மேல தெரு ஹரிஹரசுதன் 22. இவரது நண்பர்கள் விஷ்வா 20,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மேல தெரு ஹரிஹரசுதன் 22. இவரது நண்பர்கள் விஷ்வா 20, திருக்குமரன் 21. தொண்டி ஹரீஸ்பாபு 20, அஜித் 26, ஆகிய 5 பேர்களும் செப்., 9 ம் தேதி காரில் தேவகோட்டை அருகே புளியாலுக்கு வந்துவிட்டு, திருவாடானை நோக்கி சென்றனர். புளியால் -– பருத்தியூர் இடையே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் காயமுற்றனர். பலத்த காயமுற்ற ஹரிஹரசுதனை மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.