அழிவின் விளிம்பில் பாரம்பரிய தொழில்... கூமாபட்டியில் குறைந்து வரும் தென்னை கிடுகு பின்னும் தொழில்

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வந்த இப்பகுதியில், தென்னை ஓலைகளைக் கொண்டு கிடுகு பின்னும் தொழிலில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பகுதியில் தென்னை கிடுகு பின்னும் தொழில் அழிந்து வரும் நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வந்த இப்பகுதியில், தென்னை ஓலைகளைக் கொண்டு கிடுகு பின்னும் தொழிலில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமத்தில், தென்னை விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று வருகிறது. தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகள் வீடுகளின் கூரைகள் அமைக்கவும், விசேஷ நிகழ்வுகளுக்கு பந்தல் போடவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.கூமாபட்டி பகுதியில் தென்னை விவசாயம் செழித்திருந்ததால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கிடுகு பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது.
தற்போது கால மாற்றத்தின் காரணமாக, வீடுகளின் மேற்கூரைகளுக்கு ஓடுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், விசேஷ நிகழ்வுகளுக்கு துணிகளால் ஆன சாமியானா பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. இதனால், கிடுகு பின்னும் தொழிலின் தேவை குறைந்து வருகிறது. தற்போது ஒரு சிலரே கிடுகு பின்னும் தொழிலை செய்து வருகின்றனர். இந்தத் தொழில் அழிந்து வரும் நிலையில் உள்ளதால், இதனைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிடுகு பின்னும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
