Crime, law and justice
முதல்வர் விஜய்க்கு த.மா.கா., தலைவர் பாராட்டு
சென்னை: 'சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரி, தனி தீர்மானம் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் விஜய், அறிவித்த பல்வேறு அறிவிப்புகள், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளன.
தமிழகத்தில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் கூடிய, ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் அமைக்கப்படும் என, அறிவித்திருப்பது, மிகவும் இன்றியமையாதது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை முதன்மை மற்றும் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரி, தனி தீர்மானம் கொண்டு வந்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உள்ளிட்ட அறிவிப்புகள் அனைத்தும் பாராட்டத்தக்கவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.