ரயில்வே சிக்னல் பழுது: 4 ரயில்கள் தாமதம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயில்வே சிக்னல் பழுது காரணமாக, 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றன.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செப்.,16 இரவு பலத்த இடி , மின்னலுடன் மழை பெய்தது. இதனால், பேரணி ரயில் நிலையத்தில் அதிகாலை 2:40 மணியளவில், 'சிக்னல் டிஸ்பிளே' பழுதாகி போனது.
விழுப்புரம் ரயில்வே டெக்னீசியன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தொடர்ந்து, அதிகாலை 3:21 மணிக்கு மீண்டும் சிக்னல் சரி செய்யப்பட்டது.
இதன் காரணமாக, ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் போர்ட் மெயில் (வண்டிஎண்: 16752 ), துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ( வண்டிஎண்:12694 ), கொல்லத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்:20636) திருநெல்வேலியிலிருந்து சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்:12632) ஆகிய நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும், 40 நிமிடங்கள், தாமதமாக சென்றன. அதன் பிறகு சென்ற ரயில்கள் அனைத்தும் சரியான நேரத்திற்கு சென்னைக்கு சென்றன.