Crime, law and justice
மகன், மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்
ஈரோடு; சேலம் மாவட்டம் வைகுந்தம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 35; இவரின் மனைவி தன-லட்சுமி, 27; தம்பதிக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார்.
பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். சங்ககிரியில் லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 3ல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் கந்தசாமி வீடு திரும்பிய-போது, மனைவி மற்றும் மகனை காணவில்லை. கொடுமுடி போலீசில் கந்தசாமி அளித்த புகாரின்-படி போலீசார் தேடி வருகின்றனர்.* பவானி அடுத்த ஆர்.என்.புதுார் மாயவரத்தை சேர்ந்த பெயிண்டர் பெருமாள், 57; இவரது மகள் உமா மகேஸ்வரி, 31; இவரின் கணவர் சந்திரசே-கரன். தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சந்-திரசேகரன் மது போதையில் அடிக்கடி தகராறு செய்ததால், தந்தை வீட்டுக்கு மகன்களுடன் உமா மகேஸ்வரி வந்து விட்டார். இந்நிலையில் அவரை காணவில்லை. பெருமாள் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி
வருகின்றனர்.