நீலகிரியில் நிலவும் வறட்சி..! கேத்தி கிராம மக்கள் மழை வேண்டி சிறப்பு வழிபாடு..!

நீலகிரி மலை மாவட்டத்தில் வறட்சியை போக்க, கேத்தி 14 ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து முக்கட்டி சிவன் ஆலயத்தில் மகாயாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
நீலகிரி மலை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியைப் போக்க, கேத்தி 14 ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து முக்கட்டி சிவன் ஆலயத்தில் மகாயாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதால், மழை வேண்டி இந்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
நீலகிரி மலை மாவட்டம், வழக்கமாக அதிக மழை பெறும் பகுதியாக இருந்தாலும், இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தாலும், தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும் போதுமான மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவுகிறது. இதனால் குளங்கள் வறண்டு, விவசாய நிலங்கள் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கேத்தி 14 ஊர் கிராம மக்கள் மற்றும் நேரி ஃபவுண்டேஷன் சார்பில் முக்கட்டி சிவன் ஆலயத்தில் வருண பகவானை தரிசிக்கும் விதமாக மகாயாகம், சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
