எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி
ஆத்துார்:சர்வதேச இளைஞர் தினத்தை ஒட்டி, ஆத்துார் அரசு மருத்துவமனை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆத்துார் கிளை, தனியார் கல்லுாரி சார்பில், எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ரெட்கிராஸ் சேர்மன் ஜோசப் தளியத் தலைமை வகித்தார்.
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், ஆர்.டி.ஓ., தமிழ்மணி, பேரணியை தொடங்கி வைத்தார். 'எய்ட்ஸ் நோய் அறிகுறி, அதன் பாதிப்பு' குறித்து மாணவியர், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, உடையார்பாளையம், பஸ் ஸ்டாண்ட், ராணிப்பேட்டை வரை சென்றனர். மேலும் மருத்துவமனை எய்ட்ஸ் கட்டுப்பாடு பிரிவு தலைமை மருத்துவர் பவித்ரா, விழிப்புணர்வு வாசக ஸ்டிக்கர்களை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டி, மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி எடுத்துரைத்தார். ரெட்கிராஸ் செயலர் சுந்தர்ராஜ், பொருளாளர் அர்த்தனாரி, தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.