பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: பணி பாதுகாப்பு வழங்குவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இந்த சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட மையம் சார்பில் மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மகளிர் துணைக் குழு அமைப்பாளர் வினோதினி வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வேலுச்சாமி வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தனர். மாநிலச் செயலாளர் நீதி ராஜா நிறைவுரை வழங்கினார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, தற்காலிக பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குவது, சாலைப் பணியாளர் களின் வேலை நிறுத்தக் காலத்தை வரன்முறை செய்வது, பணி பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி, துணைத் தலைவர் பாலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.