Politics
திருமண விழா

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள பிரசன்னா மஹாலில், சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் பசும்பொன் சி. மனோகரன் இல்ல திருமண விழா நடந்தது.
பொதுச் செயலாளர் வைகோ மணமக்கள் செல்வசதீஷ் - ஸ்ரீகாவியாவை வாழ்த்தினார். மாவட்ட துணைச் செயலாளர் வே. செல்வராசன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுபஸ்ரீ மிதுன்ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வ. தனுஷ்கோடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சி. ராஜ்கமல், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.