Arts, culture, entertainment and media
தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
தர்மபுரி; தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த புற-வடை பகுதியில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் அருகில் உள்ள ஏலகிரியான்கொட்டாய் முதல் முண்டாசு புறவடை செல்லும் பிரிவு சாலை அடைக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் முண்டாசு புறவடை, பொத்-தலான்கோட்டை, வேட்டராயன் கொட்டாய் உள்-ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒரு கி.மீ., துாரம் சுற்றிவர வேண்-டிய நிலையுள்ளது. ஏற்கனவே, ஏலகிரியான்-கொட்டாய் பகுதி செல்லும் பிரிவு சாலை பகு-தியில் வாகன போக்குவரத்துக்கு உகந்தவாறு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் திருநங்கைகள், நேற்று காலை, 10:30 மணிக்கு ஏலகிரியான்கொட்டாய் பிரிவு சாலை பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி-குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்-போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக-ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவ-டிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர். இதைய-டுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 12:00 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.