ஆபத்தான மருத்துவ கழிவுகள்
* புதுார் ஐயப்பன் கோயில் எதிரே சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றனர். இப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தெருநாய்கள் தொல்லை மதுரை காந்தி நகர், ராஜாஜி தெரு, ஜவஹர் தெரு, ஆசாத் தெரு பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக திரிகின்றன. தனியாக செல்வோரை கும்பலாக துரத்தி அச்சுறுத்துகின்றன. மாநகாராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்துச்செல்ல வேண்டும்.
* போக்குவரத்து நெரிசல் நாகமலை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை ஆக்கிரமித்து சிலர் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நெரிசலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை கோ ஆப்டெக்ஸ் காலனி முன்பு குப்பைக் கிடங்கில் இறைச்சிக் கழிவுகளை அளவுக்கு அதிகமாக கொட்டுகின்றனர். இதனால் குடியிருப்போர் துர்நாற்றம், சுகாதார கேடுக்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வில்லாபுரம் காவிரி தெரு அரசு பள்ளி அருகே தெருவிளக்குகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா