ஒரே நாளில் 3 பட்டாசு விபத்துகள்
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் கங்கர் செவல் கிராமத்தில் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த ரதிமீனா பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் பெற்ற யசோ பயர் ஒர்க்ஸ் உள்ளது.
இந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு பணிகள் முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்பி விட்ட நிலையில் இங்குள்ள பட்டாசு திரி தயாரிக்கும் அறையில் திடீரென புகை கிளம்பி தீ பற்றியது. அருகில் உள்ள மற்றொரு பட்டாசு திரி தயாரிக்கும் அறைக்கும் தீ பரவியது. இரு அறைகளும் தீ யில் கருகின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
நேற்று மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்தன.