Arts, culture, entertainment and media
ஏரி மதகை திறப்பதில் தகராறு 4 பேர் மீது வழக்குப் பதிவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏரி மதகை திறப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுநாகலுார் பகுதியைச் சேர்ந்தவர் மணி, 60; தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர். கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். பா.ஜ., அமைப்புசார தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர்.
கடந்த 3ம் தேதி கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர். அப்போது ஏரி மதகை திறப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்தபின் இரு தருப்பினரும் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ரமேஷ், முரளி, குப்புசாமி மகன் ஏழுமலை, வேலு மகன் ஏழுமலை ஆகிய 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.