பரங்கிப்பேட்டையில் கொசு மருந்து அடிக்கும் பணி
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில், கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.
பருவ மழை காலத்தில் வரக்கூடிய தொற்று நோய்களான டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்கள் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணி பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் நடந்து வருகிறது.
இப்பணியை, பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் துவக்கி, வைத்தார். கொசு மருந்து அடிக்கும் பணி தொடர்ந்து, 18 வார்டுகளிலும் நடந்து வருகிறது.