இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை
இளையான்குடி, செப்.11- இளையான்குடி நடைபெற்ற மாறநாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள்
இளையான்குடி நடைபெற்ற மாறநாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
63 நாயன்மார்களுள் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோவிலில் உள்ள மாறநாயனார், புனிதவதி அம்பாள் சன்னதி முன் நேற்று காலை துவங்கியது. புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு ஹோமங்களை சிவாச்சாரியார்கள் வளர்த்தனர். பின்னர் சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன்,மாறநாயனார், புனிதவதி அம்மன் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம்,ஆராதனை நடந்தது. கரூர் சாமிநாத தேசிகர் குழுவினரின் திருமுறை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.மாலை 6:00 மணிக்கு வள்ளலார் மாறநாயனார் என்ற தலைப்பில் சிராப்பள்ளி மாரியப்பனின் சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8:30 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் ஜோதியாக காட்சியளித்ததை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா நடந்தது.விழா ஏற்பாடுகளை மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்