தரமணியில் மின் குறைதீர் கூட்டம்
சென்னை:சென்னை தரமணி சி.எஸ்.ஐ.ஆர்., ரோட்டில், 110 கிலோ வோல்ட் திறனில் டைடல் பார்க் துணைமின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஐ.டி., காரிடார் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் , 17ம் தேதி காலை, 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில் தரமணி, பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் வசிப்போர் பங்கேற்று மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.