Science and technology
ஆப்பிளுக்கு அதிர்ச்சி கொடுத்த Xiaomi.. சீனா சந்தையில் தூள் கிளப்பும் ஃபோல்டு மாடல் போன்..

தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. கருப்பு, வெள்ளை, சிவப்பு, செராமிக் ஆகிய கலர் எடிஷன்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் Fold Model 'ஐஃபோன் டுவோ' (iPhone Duo) மாடலை அறிமுகப்படுத்திய இரண்டு நாட்களுக்குள், ஷியோமி நிறுவனம் தனது புதிய 'ஷியோமி 18 ஃபோல்டு' (Xiaomi 18 Fold) ஸ்மார்ட்போனை சீனச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.
செப்டம்பர் 7 அன்று ஷியோமி 18 ஃபோல்டு அறிமுகம் செய்யப்பட்டது, அதன் பிறகு செப்டம்பர் 9 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன் டுவோ மாடலை வெளியிட்டது. ஆப்பிளின் மடிப்புத் தொலைபேசி அக்டோபர் 23 அன்றுதான் சந்தைக்கு வரவுள்ள நிலையில், ஷியோமி தனது 18 ஃபோல்டு மாடலை உடனடியாகச் சீன வாடிக்கையாளர்களின் விற்பனைக்குக் கிடைக்குமாறு செய்து முந்தியுள்ளது.
ஷியோமி 18 ஃபோல்டு ஆரம்ப விலை தோராயமாக 1,540 டாலர் (சீனாவில் CNY 10,999) ஆகும். இது ஆப்பிள் ஐஃபோன் டுவோவின் தொடக்க விலையான 1,999 டாலரை ஐ விடக் குறைவானதாகும்.
பாஸ்போர்ட் அளவிலான சிறிய வடிவ அமைப்பைக் கொண்ட இந்த போன், மடிக்கப்படாத நிலையில் 5.02mm தடிமனும், 219 கிராம் எடையும் கொண்டது.
5.38 இன்ச் வெளித்திரையும் (Cover Display), மடிப்பை விரித்தால் 7.58 அங்குல டேப்லெட் போன்ற பெரிய உள் திரையும் இதில் உள்ளது. ஷியோமியின் சொந்த XRING O3 பிராசஸர் மூலம் இது இயங்குகிறது. 12GB மற்றும் 16GB RAM தேர்வுகளுடன் 256GB, 512GB மற்றும் 1TB சேமிப்பக விருப்பங்களில் கிடைக்கிறது.
லைகா (Leica) பிராண்டிங் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள் இதில் உள்ளன — 200MP முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைடு மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமரா. நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் செராமிக் (Ceramic) ஆகிய கலர் எடிஷன்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
