Politics
காங்.,மறு சீரமைப்பு ஆய்வு கூட்டம்
உடுமலை: உடுமலையில் காங்., கட்சி மறுசீரமைப்பு திட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது.
உடுமலையில், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்., இயக்க மறுசீரமைப்பு திட்டம்–2 ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.
உட்கட்சி தேர்தல் மண்டலப் பொறுப்பாளர் தணிகாசலம், மாவட்டப் பொறுப்பாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, புதிய நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது, புதிய உறுப்பினர்களை இணைப்பது, இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சிப்பணிகளில் அதிக அளவில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.