Sport
ரோஹித் சாதனையை முறியடித்த அபிஷேக்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
அதிவேக சதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை!
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அபிஷேக் சர்மா அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 30 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 34 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும்.
Updates â¶ï¸ https://t.co/Zixki4RhPt#TeamIndia | #AFGvIND | @OfficialAbhi04 pic.twitter.com/VcO7UHQ9KR
30 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் முழு உறுப்பினர்கள் அடங்கிய அணிகளுக்காக டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிகவேகமாக சதம் விளாசிய வீரர்கள் (முழு உறுப்பினர் நாடுகளில்)
அபிஷேக் சர்மா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2026 (36 பந்துகளில்)
சிக்கந்தர் ராஸா -கேம்பியாவுக்கு எதிராக, 2024 (33 பந்துகளில்)
ஃபின் ஆலன் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, (33 பந்துகளில்)
டேவிட் மில்லர் - வங்கதேசத்துக்கு எதிராக, 2017 (35 பந்துகளில்)
ரோஹித் சர்மா - இலங்கைக்கு எதிராக, 2017 (35 பந்துகளில்)
Indian opener Abhishek Sharma dazzled by smashing a lightning-fast century in the final T20 match against Afghanistan.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.